முத்திரைத்தாள் மோசடி நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்திய சிபிசிஐடி!

அரசு செய்திகள்;

Update: 2025-04-16 11:13 GMT
கடந்த 2020 ஆம் ஆண்டு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வங்கிகள் சம்பந்தமான வழக்குகளில் ஒரிஜினல் முத்திரைத்தாளுக்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி முத்திரைத்தாளை பயன்படுத்தி சுமார் 30 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்த சம்பவத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் நான்கு பேரை சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்ற ஆய்வு குழு கடந்த 220 ஆண்டு ஆய்வு மேற்கொண்டபோது கடந்த 2014 முதல் 2016 வரை தொடரப்பட்ட 75 வங்கி சம்பந்தமான அசல் வழக்குகளில் ஒரிஜினல் முத்திரைத்தாளிற்க்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட முத்திரைகளை பயன்படுத்தி சுமார் 30 லட்சம் வரையில் மோசடி செய்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஆய்வுக்குழுவிற்கு இது குறித்த புகாரை மாவட்ட நீதிமன்ற ஆய்வுக் குழுவினர் அனுப்பி உள்ளனர். இந்த முறைகேடுகளை பார்த்த சென்னை உயர்நீதிமன்ற ஆய்வுக் குழுவின் வழிகாட்டலின்படி குற்றவாளிகளை கண்டறியும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதன் பின் இந்த குற்றத்தின் தன்மையை பொறுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் போலி முத்திரைத்தாளை நீதிமன்ற வழக்குகளுக்கு பயன்படுத்தி சுமார் 30 லட்சம் ரூபாய் வரையில் மோசடி செய்த தஞ்சை,கும்பகோணம்,சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அதில் கடந்த 9 ஆம் தேதி கும்பகோணத்தை சேர்ந்த செந்தில்குமார், வல்லம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ்,சென்னையைச் சேர்ந்த முனியாண்டி,தஞ்சாவூரை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த சிபிசிஐ போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் அந்த நான்கு பேரையும் இன்று புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சிபிசிஐடி போலீசார் அவர்களை விசாரணைக்காக இரண்டு நாள் நீதிமன்ற காவலில் எடுத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் இங்கு மட்டும்தான் இந்த முறைகேடு நடந்துள்ளது அல்லது வேறு நீதிமன்றங்களிலும் இந்த முறைகேடு நடந்துள்ளது என்பது தெரியவரும் என்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் எனவும் சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News