பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பணம் கொடுத்தவரை கார் ஏற்றிக்கொன்ற நபர்
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பணம் கொடுத்தவரை கார் ஏற்றிக்கொன்ற நபர்;
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முதல் காரணமாக பணம் கொடுத்தவரை கார் ஏற்றிக்கொன்ற நபர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்பாபு இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செங்கல்பட்டு மருத்துவமனையில் அமரர் உறுதி ஓட்டும ஒப்பந்த ஊழியர் சிவராஜ் என்பவருக்கு சரத் பாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு லட்சம் கடன் கொடுத்துள்ளார். இதனை திருப்பி கேட்ட சரத் பாபுக்கும், சிவராஜிக்கும அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சரத் பாபு அவர் வீட்டு அருகே சாலையில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துளளார். அப்போது மது போதையில் கார் ஓட்டி வந்த சிவராஜ் அமர்ந்திருந்த சரத்பாபு மீது வேகமாக காரை மோதி உள்ளார்.இதில் படுகாயம் அடைந்த சரத் பாபு அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் போகும் வழியில் உயிரிழந்துள்ளார். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைத்துவிட்டு கொலை செய்த சிவராஜ் கைது செய்தும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தும் படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பணம் கொடுத்தவரைய கார் ஏற்றி கொலை செய்துள்ளது கிராமத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.