மாமண்டூர் அரசு மதுபான கடை ஷட்டரை உடைத்து மதுபானம் கொள்ளை
மாமண்டூர் அரசு மதுபான கடை ஷட்டரை உடைத்து மதுபானம் கொள்ளை இரும்பு பெட்டகத்தில் இருந்த பணம் தப்பியது;
மாமண்டூர் அரசு மதுபான கடை ஷட்டரை உடைத்து மதுபானம் கொள்ளை இரும்பு பெட்டகத்தில் இருந்த பணம் தப்பியது செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூர் பகுதியில் அரசு மதுபான கடை 4388 இயங்கி வருகிறது. இப்பகுதியில் எப்பொழுதும் அதிகமான வாகன போக்குவரத்து காணப்படும் நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மதுபான கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்து உள்ளே இறங்கி சுட்டரை உடைத்து உள்ளே சென்று தேவையான மது பாட்டில்களை மட்டும் எடுத்துச் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டகத்தில் இருந்த பணம் தப்பியது இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து அவை பக்கத்தில் உள்ள குளத்தில் வீசி சென்று உள்ளனர். அவற்றையும் கைப்பற்றி கண்காணிப்பு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மது பாட்டில்கள் குறித்து தற்போது கணக்கிடும்படி நடைபெற்று வருகிறது.