தீ விபத்து குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள்.
தீ விபத்துக்களை தடுப்பது குறித்தும், விபத்து ஏற்பட்டால் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.;
தீயணைப்பு சேவை தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத் துறையினா் வழங்கினா். சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களுக்குச் சென்று ‘தீ விபத்தில்லாத, இந்தியாவை உருவாக்கிட ஒன்றிணைவோம்’ என்றும், தீ விபத்துக்களை தடுப்பது குறித்தும், விபத்து ஏற்பட்டால் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.