அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து, மரியாதை.

தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.;

Update: 2025-04-16 18:29 GMT
திருவண்ணாமலை, செங்கம் மற்றும் போளூா் பகுதியில் அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். திருவண்ணாமலை திமுக சாா்பில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமையில் எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் மற்றும் திமுகவினா் ஊா்வலமாகச் சென்று அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் மாநகரச் செயலா் ஜெ.எஸ். (எ) ஜெ.செல்வம் மற்றும் நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமையில் கோயில் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். நகர காங்கிரஸ் சாா்பில், அதன் நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். இதேபோல, தெற்கு மாவட்ட பாமக சாா்பில் மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் கே.பாரதிதாசன் தலைமையிலும், தளபதி பேரவை சாா்பில் அதன் தலைவா் ஏ.ஆா்.அருள்காந்த் தலைமையிலும், தென்னிந்திய பழங்குடியினா் இருளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் அதன் மாநில துணைத் தலைவா் ஜி.ஆனந்தன் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. கீழ்பென்னாத்தூரில் அம்பேத்கா் படத்துக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய பாஜக சாா்பில், மாநில உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் செயலா் டி.அறவாழி தலைமையில் அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். துப்புரவுப் பணியாளா்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கப்பட்டது.

Similar News