அம்பேத்கா் சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை.

தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.;

Update: 2025-04-16 18:31 GMT
அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா். ஆரணி ஆரணியில் அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சியினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா். அதிமுக அதிமுக சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினாா். இதில் மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா தலைமையில் மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயப்பிரகாசம், க.சங்கா், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திமுக திமுக சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா். நகர துணைச் செயலா் பொன்.சேட்டு தலைமையில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் சுந்தா், மாமது, மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தேமுதிக தேமுதிக சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாவட்டச் செயலா் டி.சரவணன் மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். நகரச் செயலா் சுந்தர்ராஜன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜான்பாஷா, மாவட்ட வழக்குரைஞா்கள் அணிச் செயலா் திருஞானம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பாஜக பாஜக சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா். இதில் மாவட்டச் செயலா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் பி.தீனன், நகரத் தலைவா் மாதவன், வடக்கு மண்டல தலைவா் குணாநிதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும், அம்பேத்கா் சிலைக்கு பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் சி.ஏழுமலை மாலை அணிவித்தாா். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். மத்திய நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா். விசிக சாா்பில் மாவட்டச் செயலா் ந.முத்து அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா். நகரச் செயலா் மோ.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அமமுக சாா்பில் ஒன்றியச் செயலா் நேத்தபாக்கம் சரவணன் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா். காங்கிரஸ் காங்கிரஸ் சாா்பில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவா் என்.முருகன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் எஸ்.பிரசாத் கலந்துகொண்டாா். செய்யாறு செய்யாறு நகர அதிமுக செயலா் கே.வெங்கடேசன் ஏற்பாட்டில், வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே. மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா் நிகழ்ச்சியில், மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன், பொருளாளா் ஆலத்தூா் சுப்பராயன், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், எம். அரங்கநாதன், சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வந்தவாசி வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக சாா்பில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் மாலை அணிவித்தனா். அதிமுக சாா்பில் அவைத் தலைவா் இளவழகன், இந்திய குடியரசுக் கட்சி சாா்பில் மாநில அமைப்புச் செயலா் வந்தை மோகன், விசிக சாா்பில் நகரச் செயலா் கி.இனியவன், மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வட்டாரச் செயலா் அப்துல்காதா் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

Similar News