போளூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு.
பள்ளி, வேளாண் விரிவாக்கம் மையம், அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிசி ஆலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார்.;
போளூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பள்ளி, வேளாண் விரிவாக்கம் மையம், அங்கன்வாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரிசி ஆலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறார் அதன் அடிப்படையில் போளூர் அடுத்த காங்கேயனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்கள் விளையாடி வந்தனர் இந்நிலையில் ஆட்சியர் தர்ப்பகராஜ் மாணவர்களுடன் இணைந்து விளையாடினார். அவனைத் தொடர்ந்து மாணவர்கள் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்துவதை பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து வசூர் ஊராட்சியில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு உயிர் உரங்களை தரமான முறையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்படுவதை ஆய்வு செய்தார் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் போளூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெற் பயிர்கள் மற்றும் உரங்கள் வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து கஸ்தாம்பாடி ஊராட்சியில் தமிழ்நாடு மகளிர் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு பட்டு உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு பட்டு உற்பத்தி செய்யும் முறை குறித்தும் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவினம் குறித்தும் மகளிர் சுய உதவி குழுக்களோடு கலந்துரையாடினார். தொடர்ந்து களம்பூர் பேரூராட்சியில் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக இந்தியன் வங்கியின் தொழில் முனைவோர்க்கான மூல தன நிதி உதவி பெற்று இயங்கி வரும் சங்கர் மாடன் அரிசி ஆலையில் ஆய்வு செய்து அரிசி ஆலை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து கேட்டிருந்தார் தொடர்ந்து உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் களம்பூர் நியாய விலை கடையில் பொருட்கள் இருப்பு விவரம் குறித்தும் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படுகிறதா என விற்பனையாளரிடம் கேட்டரிந்தார்கள். தொடர்ந்து களம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார் பின்னர் சந்தவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அணுகுமுறை குறித்தும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முறையாக வீட்டிற்கு வந்து பரிசோதனைகள் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி தாய்மாருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ன தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்து நலமாக உள்ளீர்களா செவிலியர்கள் முறையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்குகின்றார்களா? மருத்துவ பரிசோதனைக்கு ஆரம்ப சுகாதாரத்திற்கு வரும்பொழுது கால தாமதமின்றி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறததா? மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக அணுகுகிறார்களா? என தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் காலதாமதம் இன்றி மேற்கொள்ளப்படுகிறது எனவும் செவிலியர்கள் வீட்டிற்கு வந்து மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஆட்சியர் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார் இந்நிகழ்வின் போது உடன் போளூர் வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, துணை வட்டாட்சியர் சிவலிங்கம், மற்றும் அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.