ஜெயங்கொண்டம் பகுதிக்கு ரயில்தடம் : பொய் வாக்குறுதி: பாஜக மாநில தலைவர்:குற்றசாட்டு வைத்த எம்எல்ஏ அமைசசர்:திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?மக்கள் எதிர்பார்ப்பு
ஜெயங்கொண்டம் பகுதிக்கு ரயில் தடம் அமைப்பது பற்றி பொய் வாக்குறுதி அளித்த பாஜக மாநில தலைவர் என அண்ணாமலையை குற்றம் சாட்டிய எம்எல்ஏ அமைச்சர் அத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா? என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.;
அரியலூர், ஏப்.17- ஆண்டிமடம் மற்றும் தா.பழூருக்கு தீயனைப்பு நிலையம், ஆண்டிமடம் பகுதிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் முந்திரி தொழிற்சாலை, காகித தொழிற்சாலை அமைப்பது, விருத்தாச்சலத்தில் இருந்து மதனத்தூர் வழியாக கும்பகோணம் செல்ல நான்கு வழி சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்த ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணனை தொகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும் ஜெயங்கொண்டத்தில் என் மண் என் மக்கள் என்ற நடைபயணம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஜெயங்கொண்டதிற்கு வந்திருந்த போது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம் வரை ரயில் தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொய்யான வாக்குறுதி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயங்கொண்டம் தொகுதி எம்எல்ஏவும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்து திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்..மேலும் ரயில் திட்டத்தினை பற்றி எம் எல் ஏ சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்காதது ஏன்? என தொகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.