ஜெயங்கொண்டத்தில் நகராட்சி சாதாரண கூட்டம்.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது.;
அரியலூர், ஏப்.17 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலக கூட்டரங்கில் நகர மன்ற உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம் நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகராட்சி மேலாளர் அன்புசெல்வி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ் ரங்கநாதன், கிருபாநிதி, பாண்டியன், துர்காஆனந்த், , மீனாட்சி நடராஜன் மற்றும் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் ஜின்னா,நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாபு, நகராட்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அடிப்படை வசதிகளான குடிநீர், தார் சாலை, சிமெண்ட் சாலை, தெருவிளக்கு, 4 ரோடு பகுதியில் பொதுக்கழிப்பறை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர் முன்வைத்தனர். கவுன்சிலர்கள் கேட்டுக் கொண்டபடி அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.