தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு

நாச்சினம்பட்டி பகுதியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு தொண்டு வாரம் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு;

Update: 2025-04-18 00:55 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சினம் பட்டியில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு தொண்டு வாரம் மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு துறையில் பணியாற்று வீரர்கள் மற்றும் தீ விபத்தால் உயிரிழந்தவர்களின் நினைவாக தீ தடுப்பு தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து நேற்று மாலை நாச்சினம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை எடுத்து அரூர் தீயணைப்பு மீட்பு நிலையத்தில் நாச்சினம்பட்டியில் இயங்கி வரும் ரதி காட்டன் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம் காட்டப்பட்டது. இதில் தீ தடுப்பு பயிற்சி மாவட்ட அலுவலர் அம்பிகா, அரூர் நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பித்தனர்.

Similar News