இருளர் மக்களுக்கு புத்தாடை வழங்கிய தன்னார்வலர்கள்
ஏரியூர் அருகே இருளர் தின மக்களுக்கு புத்தாடை வழங்கிய தன்னார்வலர்கள்;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஏரியூர் பகுதியில் மக்களுக்காக பல மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர் வைகை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குமரேசன்,பல சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படும் போது பல ஏழ்மையில் உள்ள மக்கள், குழந்தைகள் பயன் பெறுவர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக 300 குழந்தைகளுக்கான புத்தாடைகளை ஏரியூர் பகுதி இருளர் குடியிருப்பு வைகை தொண்டு நிறுவனம் மூலம் நேற்று மாலை வழங்கினர். புத்தாடைகளை ஏரியூர் பகுதி மூலபெல்லூர்,சிடுமனஹள்ளி, சத்தியநாதபுரம், தண்டா ஏரியூர், மூங்கில் மடுவு ஆகிய பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வைகை குமரேசன் அவர்கள் வழங்கினார். மை தருமபுரி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம், கணேஷ் ஆகியோர் புத்தாடை வழங்கிய உரிமையாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.