சாலை விபத்தில் வாலிபர் பலி
மதுரை சமயநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியானார் .;
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டபுலி நகர் நான்கு வழி சாலையில் இன்று (ஏப்.18) அதிகாலை மதுரை மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்த சூரியபிரகாஷ் (30) என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சடலத்தை சிக்கி இழுத்துச் சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.