டேங்கர் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து
பெரியாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலைகள் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்து 15 பேர் படுகாயம்;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியாம்பட்டி அருகே இன்று ஏப்ரல் 18, சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ஊருக்குள் செல்ல தனியார் பேருந்து வளைவில் திரும்பிய போது அங்கு எதிரே வந்த டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.