மோடி அரசு நிறைவேற்றியுள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா மற்றும் கண்டன போராட்டம்

மோடி அரசு நிறைவேற்றியுள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-18 02:55 GMT
அரியலூர், ஏப்.18- மோடி அரசு நிறைவேற்றியுள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை ஜெயங்கொண்டம் காந்தி சிலை முன்பாக நடைபெற்றது.  போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்..வெங்கடாசலம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு இர.மணிவேல், ஏ.கந்தசாமி, டி.அம்பிகா, வி. பரமசிவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.கூட்டத்தில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வட்ட செயலாளர் எம்.வேல்முருகன், மற்றும் ஆர் இளவரசன், பி.பத்மாவதி, எஸ்.மீனா, எஸ்.குமார், டி..தியாகராஜன், ஆர்.ரவிந்திரன், இ.மைதீன்ஷா, சாகுல் ஹமீது அக்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.  அப்போது இஸ்லாமிய மக்களை சீர்குலைக்கும் வகையிலும் வஃபு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள வஃபு திருத்த சட்டத்தை  கைவிட வேண்டும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு நிதியை வழங்க வேண்டும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 50 விலை உயர்த்தியதை மீண்டும் வாபஸ் பெற வேண்டும், டீசல் பெட்ரோல் மீது போடப்பட்ட கலால் வரி லிட்டருக்கு ரூ 2 உயர்வை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

Similar News