அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-18 03:05 GMT
அரியலூர், ஏப்.18- மத்திய பாஜக அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்புக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்துக்கு தர வேண்டிய 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும். சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.50 உயர்த்தியை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கலால் வரியை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அ.அருண்பாண்டியன் தலைமை வகிததார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டியனா, மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துரைசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். வட்டச் செயலர்கள் செந்துறை கு.அர்ச்சுணன், திருமானூர் சாமிதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். :

Similar News