அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டம்

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது -;

Update: 2025-04-18 03:06 GMT
அரியலூரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சரிவர அகற்றப்படுவதில்லை நகர் மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு அரியலூர், ஏப்.17: அரியலூரிலுள்ள  அனைத்து வார்டுகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சரிவர  அகற்றப்படுவதில்லை என நகர் மன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். அரியலூர் நகராட்சி அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் சாந்திகலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, ஆணையர்(பொ)அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்(திமுக), வெங்கடாசலபதி(அதிமுக), இஸ்மாயில்(அதிமுக) ஆகியோர் பேசுகையில், வார்டுப் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் சரிவர அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. இதே போல், கழிவு நீர் செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் அகற்றாததால் ஆங்காங்கே கழிவு நீர்கள் தேங்கிக் கிடக்கிறது. ஒப்பிலாதம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, தேரோடும் வீதிகளில், தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூடி சீர்படுத்தப்பட வேண்டும். அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.கோரிக்கைகளை கேட்டறிந்த ஆணையர் அசோக்குமார் நடவடிக்கை எடுப்பதாகவும், காலியாக உள்ள 8 ஆவது வார்டுக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கூட்ட மன்றத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News