உள்ளூர் விடுமுறைக்கான பணி நாள் தேதி மாற்றம்

அரசு செய்திகள்;

Update: 2025-04-18 04:04 GMT
புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி புதுகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக 19ம் தேதி (சனிக்கிழமை) பணிநாள் என்றும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவல கங்களுக்கு 20ம் தேதி பணிநாளாக எடுத்துக்கொள் ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே 19ம் தேதியுடன் தொடர் விடுமுறை நாட்கள் வருவ தால் அன்றைக்கு பதிலாக அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் 26ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்றும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவல கங்கள் 27ம் தேதி பணிநாளாகவும் அறிவிக்கப்படுகி றது. இத்தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Similar News