அறந்தாங்கி:திருநாளூர் கோயிலில் சித்திரை திருவிழா!

நிகழ்வுகள்;

Update: 2025-04-18 04:19 GMT
அறந்தாங்கி அருகே திருநாளூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற பொழிஞ்சியம்மன் கோயில் உள்ளது. இங்கு 54 அடி உயரமுள்ள பொழிஞ்சியம்மன் சிலையும், 18 அடி உயரமுள்ள கருப்பர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15 நாட் கள் திருவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான திருவிழாவையொட்டி தினமும் மாலையில் அம்பாளுக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகங்களை சுவாமிநாதன் பிள்ளை செய்தார். இதில் திருநாளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நுாற் றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News