சேலத்தில் உள்ளாடைக்குள் மறைத்து சிறைக்கு கஞ்சா கடத்தி வந்த முதியவர்

கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை;

Update: 2025-04-18 04:31 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 62). கஞ்சா விற்ற வழக்கில் கைதான இவரை, பாகலூர் போலீசார் கைது செய்து ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் அடைக்கும் படி கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை சேலம் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது சிறை நுழைவு வாசல் பகுதியில் சிறை போலீசார் முனிராஜை சோதனை செய்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் மறைத்து 15 கிராம் கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்து முதியவரை சிறையில் அடைத்தனர்.

Similar News