தேசிய திறனறிவு தேர்வில்

சேலம் ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை;

Update: 2025-04-18 04:33 GMT
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான தேசிய திறனறிவு தேர்வு நடந்தது. இதில் சேலம் நெத்திமேடு ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 13 பேர் தேர்ச்சி பெற்று சேலம் மாவட்ட பள்ளி அளவில் 3-வது இடம் பிடித்தனர். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ேதர்வில் வெற்றி பெற்ற 13 மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 24 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர பிளஸ்-1 வகுப்பிற்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் லட்சுமி பிரியா என்ற மாணவி தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார். இதற்கு பொறுப்பாசிரியர் ஜெயராக்கினிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை உருவாக்க பாடுபட்ட 8-ம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியைகள் மற்றும் பொறுப்பாசிரியர்களான கிருஷ்ணவேணி, பியாட்ரிஸ் மற்றும் மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை லீமா புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.

Similar News