சேலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

21-ந் தேதி தொடக்கம்;

Update: 2025-04-18 04:34 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இதில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுவதற்கான வழிமுறைகள், முந்தைய ஆண்டு வினாக்களை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு வகுப்புகள் நடத்துதல், ஏற்கனவே போட்டித்தேர்வுகளில் வெற்றியடைந்தவர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச மாதிரி தேர்வுகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. எனவே தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News