சோளிங்கர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தற்கொலை
சோளிங்கர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தற்கொலை;
சோளிங்கர் நாரைகுளமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான ஆறுமுகம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். சோளிங்கர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாரைகுளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடன்கினார்.