கோவிலூரில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கு;
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தற்போது தவக்கால நோன்பு விரத காலம் முறையை அனுசரித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 17 நேற்று புனித வாரத்தின் முக்கிய நாளாக கருதப்படும் பெரிய வியாழன் அனுசரிக்கப்பட்டது இதனை அடுத்து தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 345 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த சிறப்பு திருப்பலியில் பங்கு பெற்றனர் இதில் பாஸ்கர் நாடக நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 நபர்கள் இயேசுவின் சீடர்களாக கருதப்பட்டு அவர்களின் பாதங்களை கழுவும் சடங்கு நடைபெற்றது இதில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி கழுவினார். தலைவராக இருப்பவர் பணிவிடை புரிய தயாராக இருக்க வேண்டும் என்று மறைவுரை வழங்கப்பட்டது.