தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி
நாகை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு 20-ம் தேதி நடக்கிறது;
நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க தேர்வு ஒருங்கிணைப்பாளர் மு.அருணாச்சலம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும், மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடும் நாகை மாவட்ட கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்கான தேர்வு, நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில், வருகிற 20- ம் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான தகுதி, வயது குறித்த விபரம் வருமாறு நாகை மாவட்டத்தில் வசிப்பவர்கள் அல்லது நாகை மாவட்டத்தில் மட்டும் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். 01.09.2006 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்த 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, தேர்வு ஒருங்கிணைப்பாளர் மு.அருணாச்சலத்தை 99947 86217 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.