நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-04-18 06:35 GMT
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்.18) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1.62 கோடி மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 160 மோட்டார் வாகனத்தை பயனாளிகளுக்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார்., தொடர்ந்து மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குட்பட்ட 25 ஊராட்சிகளுக்கு 1.95 கோடி மதிப்பீட்டிலான 77 E-Cart மின்கல வாகனங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, எம்எல்ஏக்கள் பூமிநாதன், வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Similar News