பொம்மிடியில் புனிதவெள்ளி வழிபாடு
பொம்மிடி புனித அந்தோனியார் கோவில் சார்பில் இயேசுவின் சிலுவைப்பாதை வழிபாடு;
இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்த தினத்தை புனித பள்ளியாக அனுசரித்து வருகின்றனர் இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று ஏப்ரல் 18, பங்கு தந்தையர்கள் ஏற்பாட்டில் பங்கு சார்ந்த இறைமக்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாதை பாடுகளை பொம்மிடியின் முக்கிய பகுதிகளில் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் அவர் பட்ட துன்பங்களையும் நடித்துக் காட்டியது காண்போரை கண்கலங்க வைத்தது பின்னர் மாலை 6 மணி வரை சிறப்பு ஆராதனை வழிபாடுகள் கோவிலில் நடைபெறும் என பங்குத்தந்தை தெரிவித்தார் இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் சென்ற ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.