தவெக அஜிதா அக்னல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் சிலுவை பாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தவெக அஜிதா அக்னல் நீர்மோர் வழங்கினார்.;
புனித வெள்ளியை முன்னிட்டு, தூய பனிமய மாதா பேராலயத்தில், சிலுவை பாதை முடிந்து வரும் பொதுமக்களுக்கு, தூய பனிமய மாதா பேராலயம் எதிரில் மற்றும் தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், ஆகிய இரு இடங்களில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணையின்படி, தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பக்தர்களுக்கு நீர், மோர், ரோஸ்மில்க் மற்றும் பழங்களை வழங்கினார்.