பெரியகுளம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

கைது;

Update: 2025-04-18 13:54 GMT
பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியை சேர்ந்தவர் குணசீலன். இவர் நேற்று முன் தினம் இரவு பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சிறுநீர் கழிக்க சென்ற போது அங்கு வந்த மூவர் கத்தியை காட்டி குணசீலனிடமிருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த தென்கரை போலீசார் திருட்டில் ஈடுபட்ட தீபக், கருணாகரன், திலீப் ஆகிய மூவரை நேற்று (ஏப்.17) கைது செய்தனர்.

Similar News