பொன்முடி மீது பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் போலீஸ் நிலையத்தில் புகார்
ஜெயங்கொண்டம் - பெண்களையும் இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்;
அரியலூர், ஏப்.18- தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களைப் பற்றியும் இந்து கடவுள்களை பற்றியும் இந்து அடையாளங்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் இந்து கடவுள்களையும் பெண்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் பாஜகவினர் புகார் அளித்தனர் இதனையடுத்து செய்திகளை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ். அமைச்சர் பொன்முடி சமீபத்தில் இந்து கடவுள்களையும் இந்து அடையாளங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் சிலர் இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர் அனைத்து சமுதாய மக்களும் வாழக்கூடிய தமிழ்நாட்டில் திட்டமிட்டு இந்து கடவுள்களையும் இந்து அடையாளங்களையும் பெண்களையும் அசிங்கப்படுத்துவதன் நோக்கம் என்ன. 2026 ஆம் ஆண்டு தேர்தல் வரவுள்ளது அப்போது சனாதனத்தை ஒழிப்பேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும் ஒரு இந்துக்களின் ஓட்டு கூட இவர்களுக்கு கிடைக்காது ஓட்டு போடக்கூடிய நேரத்தில் காவடி தூக்குவது இருமுடி கட்டுவது என இந்து மக்களை ஏமாற்றம் செயலை செய்துவிட்டு ஓட்டு வாங்கிவிட்டு இவர்கள் நடத்தக்கூடிய அரசியல் வேறு நாடக அரசியல் தான் நடத்துகிறார்கள் இவர்களுக்கு பெண்களும் இந்துக்களும் தக்க பதிலடி வரக்கூடிய தேர்தலில் கொடுக்கத்தான் போகிறார்கள் எனவே இந்து கடவுள்களையும் இந்துக்களின் அடையாளங்களையும் பெண்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் எனக் கூறினார்.