ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா.

ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2025-04-18 18:19 GMT
ஜெயங்கொண்டம், ஏப்.18- ஜெயங்கொண்டம் அருகே அரசு பள்ளியில  இப்படி ஒரு விழாவா? எனக் கேட்கிற அளவுக்கு சும்மா வேற லெவல்ல ஆண்டு விழாவை தனியார் பள்ளிக்கு நிகரா நடத்தி அசத்தி இருக்காங்க.*ஆமாங்க! எந்த ஒரு நடன ஆசிரியரும் இல்லாம, பிஞ்சு மழலை குழந்தைகள் அட்டகாச நடனத்தின் மூலமா தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கின்ற காட்சிகள் தற்போது சமூக வலைதளங்கல்ல வைரலா வேகமா பரவிட்டு இருக்குங்க! இந்த சம்பவம் எங்கு நடந்திருக்குன்னு பாத்தீங்கன்னா, அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பக்கத்துல இருக்கக்கூடிய நாகம்பந்தல் கிராமம்தாங்க. பெருசா எந்த ஒரு வசதியுமே இல்லாத அந்த கிராமத்துல அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருதுங்க. வருஷத்துக்கு ஒரு முறை நடத்தக்கூடிய ஆண்டு விழாவை தனியார் பள்ளிக்கு நிகரா, நடத்தனுங்குறதுத்தான் அங்கு இருக்கக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பெரிய எதிர்பார்ப்பா இருந்திச்சுங்க. அதே எதிர்பார்ப்புல  நாகம்பந்தல் கிராமத்துல முப்பெரும் விழா நேற்று இரவு நடந்துச்சிங்க. இதுல குறிப்பா பார்த்தீங்கன்னா நடன ஆசிரியரே இல்லாம ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் வேற லெவல்ல ஆடி அசத்தி இருந்தாங்க.  அதிலும் குறிப்பாக பாத்தீங்கன்னா இந்நிகழ்ச்சியை காண்பதற்கு நாகம்பந்தல் கிராமத்துல இருக்கக்கூடிய பட்டித்தொட்டி மக்கள் எல்லாரும் கூட்டம் கூட்டமா வந்து, அங்கு நடனமாடிய சிறுவர்களின் நடனத்தை கண்டு கைத்தட்டி ரசிச்சு பார்த்தாங்க.  அத்தோட அரசு பள்ளியில இப்படி ஒரு விழாவா என ஆச்சரியப்பட்ட பெற்றோர்கள், இதற்குக் காரணமாய் இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமின்றி அங்கு நடனமாடிய சிறுவர்களையும் உற்சாகப்படுத்தி, பள்ளிக்குத் தேவையான நிதி உதவியும் செய்து இருப்பதுதாங்க விழாவின் ஹைலைட்டா தற்போது இருந்து வருதுங்க...

Similar News