மாரண்டஅள்ளியில் இடைவிடாத பலத்த மழை
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மாரண்டஅள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கனமழை;
தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பொழிந்து வரும் சூழலில் தர்மபுரி மாவட்டத்தில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பொழிந்து நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை, கடமடை, புலிக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஏப்ரல் 19 விடியற்காலை இரண்டு மணி முதல் அதிகாலை வரை இடைவிடாத கன மழை குட்டித்தெடுத்தது தொடர்ந்து சமய நாட்களாக பொழியும் கனமழையால் பூமி குளிர்ந்து மழை நீர் வெள்ளம் போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.