சேலம் அருகே தேனீக்கள் கொட்டி இளநீர் வியாபாரி பலி

மனைவி உள்பட 2 பேர் படுகாயம்;

Update: 2025-04-19 02:50 GMT
சேலம் அருகே உள்ள வீராணம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 55). அவருடைய மனைவி காளியம்மாள் (50). இவர்கள் இருவரும் இளநீர் வியாபாரம் செய்து வந்தனர். நேற்று கணவன்-மனைவி 2 பேரும் அய்யனாரப்பன் கோவில் காடு பகுதியில் உள்ள சங்கர் என்பவருடைய தோட்டத்துக்கு இளநீர் பறிக்க சென்றனர். அப்போது தென்னை மரத்தில் இருந்த தேனீக்கள் கூடு கலைந்தது. இதனால் தேனீக்கள் பறந்து வந்து கந்தசாமி, காளியம்மாள் மற்றும் சங்கர் ஆகியோரை கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த காளியம்மாள், சங்கர் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News