ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்ம உற்சவ திருத்தேரோட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்ம உற்சவ திருத்தேரோட்டம்;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் வருடம் தோறும் சித்திரை பிரமோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பிரம்ம உற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்களாக, ஶ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன், குதிரை வாகனம், சிம்ப வாகனம், கேடயம், தங்க பல்லுக்கு, புஷ்ப பல்லுக்கு உள்ளிட்டவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் இவ்விழாவின் ஏழாம் நாளான இன்று, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உற்சவமூர்த்தி ஶ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயர்களுடன் எழுந்தருளினார்.இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், "கோவிந்தா கோவிந்தா" என பக்தி முழக்கமிட்டு, திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டு சென்றனர்.