குமாரமங்கலம் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
குமாரமங்கலம் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு;
கோடைகாலத்தில் கடும் வெப்பத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அரசியல் கட்சியினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக எலச்சிபாளையம் ஒன்றிய அதிமுக சார்பில் குமாரமங்கலம் பகுதியில் நீர் போர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அதிமுக அமைப்பு செயலாளர் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி மோகன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் முத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் புரட்சி முத்து, ஒன்றிய பேரவை நிர்வாகிகள் ரஜினிகாந்த், முத்து, அவைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மோர் தர்ப்பூசணி வெள்ளரிக்காய் உள்ளிட்ட பலவும் வழங்கப்பட்டது.