அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்;
நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி மாணவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்யாததால் 22 மாணவர்களின் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டிக்கும் வகையிலும் இறந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையிலும்நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் மாநில அமைப்பு செயலாளர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சிக்கு பரமத்தி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேகர்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்னுசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் திருச்செங்கோடு நகர திமுக செயலாளர் அங்கமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர்எஸ் ஆர் எம் டி சந்திரசேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன்,நகர அவைத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் ஒன்றிய பேரூரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் இளம்பெண்கள் பாசறை சேர்ந்தவர்கள் மாணவ மாணவிகள் என 100 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவதுபொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு முதல் கையெழுத்தாக நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என கூறியதை நம்பி ஏராளமான மாணவர்கள் இருந்த நிலையில் 22 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்ட சூழலில் அதிமுக ஆட்சியின் போது இறந்து போன மாணவிகள் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் இந்த 22 மாணவிகள் வீட்டிற்கும் செல்லாதது ஏன்நீட் தேர்வு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது இதனை எதிர்த்து மாண்புமிகு அம்மா வழக்கு தொடுத்தும் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழகம் மட்டும் விலக்களிக்க முடியாது என தீர்ப்பு வந்ததை எடுத்து தான் தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது ஆனாலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டை மாண்புமிகு எடப்பாடியாரின் அரசு கொண்டு வந்ததுஇதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் இளைஞர்கள் அனைவரும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறினார்.தொடர்ந்து திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது இதனை எடுத்து கூட்டத்தில் குழுமி இருந்த அனைவரும் நீட் தேர்வு பயத்தால் இறந்து போன 22 மாணவ மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.