நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த அமைச்சர்.

மதுரையில் பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.;

Update: 2025-04-19 15:09 GMT
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூதக்குடி ஊராட்சி , லட்சுமிபுரம் கிராமத்தில் இன்று (ஏப்.19)புதிய நியாய விலை கடையை மக்களின் பயன்பாட்டிற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கிழக்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News