ஜெயங்கொண்டம் அருகே காட்டுபன்றி கடித்து பெண் காயம்

ஜெயங்கொண்டம் அருகே பன்றி கடித்து பெண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2025-04-19 16:11 GMT
அரியலூர்,ஏப்.19 - மீன்சுருட்டி அருகே வயலில் புல் அறுக்க சென்ற போது காட்டு பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இருப்பதால் இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஆலத்திபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேணுகோபால் இவருடைய மனைவி ஜோதி (36). இவர் கூலித்தொழிலாளி.நேற்று‌ காலை தனது கால்நடைகளுக்கு புல் அறுக்க அந்த பகுதியில் உள்ள ஒரு வயலுக்கு சென்று புல் அறுத்து கொண்டு இருந்த போது திடீரென வந்த காட்டு பன்றி அவரது கையை கடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போட்டு கொண்டே ஓடி வரவே, காட்டு பன்றி வயல் வெளியில் ஓடி மறைந்தது. இதையெடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ____

Similar News