இலுப்பையூர் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
இலுப்பையூர் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.;
அரியலூர், ஏப்.20- அரியலூர் அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவர் மாரிமுத்து, தேசிய அளவில் தமிழ் இலக்கிய மன்ற போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவி அனுஸ்ரீ மற்றும் பணி நிறைவுப் பெற்ற இடைநிலை ஆசிரியர் மதியழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா என முப்பெரும் அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயராணி தலைமை வகித்து, அனைவரையும் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர் மாரிமுத்து மற்றும் மாணவி அனுஸ்ரீ ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டு தெரிவித்து கௌரவித்தார். மேலும் பணி நிறைவுப் பெற்ற ஆசிரியர் மதியழகனுக்கு பொன்னாடை அணிவித்து, மரியாதை செலுத்தினரா.இதற்கான ஏற்பாடுகள் ஆசிரியர்கள் மாயூபி, தீபக், பிரிட்டோ, ஆல்பர்ட், அருள்ராஜ், கஸ்தூரி, அனிதா ஆகியோர் செய்திருந்தனர். :