கைவினைஞர்கள் முன்னேற்ற கட்சியின் சார்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கைவினைஞர்கள் முன்னேற்ற கட்சியின் சார்பாக கோரிக்கைய ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-20 08:38 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கைவினைஞர்கள் முன்னேற்ற கட்சியின் சார்பாக கட்சியின் கோரிக்கைகளை நினைவூட்டும் விதமாக திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.மாநில இளைஞரணி செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார் கைவினைஞர் முன்னேற்றக் கட்சி தலைவர் த.பாலுகோரிக்கைகளை விளக்கி பேசினார் நடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கம்மாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதியின் படி கம்மாளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் அறநிலையத்துறை கோயில்களில் கம்மாளர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Similar News