ஜெயங்கொண்டம் பகுதிகளில் ஈஸ்டர் திருநாள் ஆடம்பர தேர்கள் பவனி
ஜெயங்கொண்டம் பகுதிகளில் ஈஸ்டர் திருநாள் ஆடம்பர தேர்கள் பவனி நடைபெற்றது.;
அரியலூர்.21- கிருஸ்த்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் முடிந்தது ஈஸ்டர் திருநாள் நள்ளிரவு முதல் ஆலயங்களில் திருப்பலி வழிபாடு நடைபெற்றது. உலக மக்களின் நல்வாழ்விற்காக இயேசு தனது உயிரை தந்த மாபெரும் நிகழ்வை கிருத்தவர்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். ஏசு கிறிஸ்து புனித வெள்ளி அன்று மரித்து மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மீண்டும் உயிர்த்தெழும் நிகழ்வு மிகவும் விமரிசையாக கொண்டாடும் ஈஸ்டர் திருநாள் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்றன. அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வை கொண்டாடும் வகையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஐந்து தேர்களில் மின் வண்ண விளக்குகள் மற்றும் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய மாதா, புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், புனித அலங்கார அன்னை, உயிர்த்த இயேசு கிறிஸ்து சொரூபங்கள் வைக்கப்பட்டு ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தன. கிறிஸ்தவர்கள் மெழுகுவத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இதேபோல் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம் புனிதபாத்திமா அன்னை ஆலயத்தில வட்டார முதன்மை குரு ஜோசப் கென்னடி, வரதராஜன்பேட்டை அலங்காரஅன்னை ஆலயத்தில் பங்குதந்தை பெலிக்ஸ் சாமுவேல், தென்னூர் அன்னை லூர்து ஆலயத்தில் லியோ, ஆண்டிமடம் மார்த்தினார் ஆலயத்தில் அடைக்கலசாமி , பட்டணங்குறிச்சி லூர்து அன்னை ஆலயத்தில் மரிய லூயிஸ், கூவத்தூர் அந்தோணியார் ஆலயத்தில் தனராஜ், , நெடுவாய் புனித அன்னம்மாள் ஆலயத்தில் செல்வராயர்,நெட்டல குறிச்சி கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை இம்மானுவேல்ஆகிய பங்குத் தந்தையர்கள் தலைமையிலும்விழப்பள்ளம் செபஸ்தியார் ஆலயம் அகினேஸ்புரம் அகினேசம்மாள் ஆலயம் வடவீக்கம் உபகாரஅன்னைஆலயம் , குமிளங்குழி புனித சவேரியார் ஆலயம் , ஆகிய ஆலய பங்குதந்தையர்கள் தலைமையில்நேற்று முன்தினம் நள்ளிரவிலும், நேற்று காலை மாலையிலும் சிறப்பு கூட்டு திருப்பலிகள் நடத்தபட்டது, ஏராளமான கிருத்துவமக்கள் கலந்துகொண்டனர்.