வாலாஜாவில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு கூட்டம்
இலவச சட்ட உதவி விழிப்புணர்வு கூட்டம்;
வாலாஜா வட்டார சட்டப் பணிகள் ஆணை குழுவின் சார்பில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு கூட்டம் வாலாஜாவில் உள்ள ராமர் கோவிலில் நடைபெற்றது. வாலாஜா முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கி னார். செயலாளர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். சட்டப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுதா கர் பாபு, விஜயகுமார், செந்தில் குமார், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டு, இலவச சட்ட உதவி பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதன் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு வழங்கினார்.