கந்திகுப்பம்: துவங்கிய கோடைகால கிரிக்கெட் பயிற்சி
கந்திகுப்பம்: துவங்கிய கோடைகால கிரிக்கெட் பயிற்சி;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள கந்திகுப்பம் கிங்ஸ்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடைகால பயிற்சி துவங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாம் இன்று முதல் மே 31-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் 14,16,19 வயதுக்குட்பட்ட சுமார் 200 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.