நீலகிரி மாவட்ட திமுக ஐ.டி விங் - வர்த்தகர் அணி சார்பில் துண்டு பிரசுரம்.
கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;
நீலகிரி மாவட்ட திமுக ஐ.டி விங் - வர்த்தகர் அணி சார்பில் துண்டு பிரசுரம். பா.ஜ.க.,வுடன் அதிமுக கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டு, நீலகிரி மாவட்ட திமுக ஐ.டி விங் மற்றும் வர்த்தகர் அணி சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் ரஹமத்துல்லா வரவேற்றார், மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் காந்தள் ரவி, எல்கில் ரவி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், மாவட்ட பிரதிநிதி கார்த்திக், நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கணபதி, விஜயகுமார், ஜெகதீசன், சந்தீப், வெங்கடேஷ், குமார், CTN பாரூக் நடனக்குமார், சிவகுமார், கழக நிர்வாகிகள் குரூஸ், முஸ்தபா, மகேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஐ. டி. விங் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.