பர்கூரில் மாவட்ட எஸ்.பி பொதுமக்களுடன் கலந்துரையாடல்.
பர்கூரில் மாவட்ட எஸ்.பி பொதுமக்களுடன் கலந்துரையாடல்.;
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் மற்றும் கந்திகுப்பம் உள்ளிட்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பர்கூர் காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்.பி. தங்கதுரை கலந்துக்கொண்டு பொதுமக்களிடையே போசும்போது பர்கூர் மற்றும் கந்திகுப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒவ்வொரு நகர மற்றும் கிராம பகுதிகளிலும் காவல்துறை சார்பில் 110 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முடிந்தவரை அனைவரது வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்களும், தானியங்கி அலாரங்களும் பொருத்த வேண்டும். மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098, 1930 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்தார்.