ராயக்கோட்டையில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய தீயணைப்புத்துறையினர்.
ராயக்கோட்டையில் துண்டு பிரசுரங்கள் வழங்கிய தீயணைப்புத்துறையினர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா கடந்த 14- ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் ராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே வீடுகளில் எழுதி தீப்பற்ற கூடிய தேவையான பொருட்கள் சேமித்து வைக்க கூடாது. ஸ்டவ் அடுப்பில் எரியும் போது மண்ணெண்ணெய் நிரப்பக் கூடாது. மின் சாதனங்களை நல்ல முறையில் கையாள கற்றுக் கொள்ளுங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.