அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் அருகாமையில் உள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம்.

அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் அருகாமையில் உள்ள மதுபானக் கடையை அகற்றக்கோரி அனைத்து கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-21 07:24 GMT
அரியலூர், ஏப்.21- அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுபான கடை எண் (6467) அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அருகே அமைந்திருப்பதால் இதனை அகற்ற கூறி நீலப்புலிகள் இயக்கம் சார்பில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. தா.பழூர் சுத்தமல்லி மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெண்கள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசு நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் மதுபான கடை செயல்பட வேண்டுமென அரசாணை வெளியிட்டிருந்தும் தா.பழூர் மெயின் ரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் பகுதிக்குள் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.இதனால் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டுமென உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விடுதலை தமிழ் புலிகள், எஸ்டிபிஐ , பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Similar News