கூடலூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருக்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக நேற்று வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்ட திருக்குமார் கத்தியால் வினோத்குமார் மற்றும் அவரது நண்பரை குத்தி தாக்கி உள்ளார். இது குறித்த புகாரில் கூடலூர் வடக்கு போலீசார் திருக்குமாரை நேற்று (ஏப்.20) கைது செய்தனர்.