அரப்படிதேவன் பட்டியில் பீர் பாட்டிலால் தாக்குதல் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு;
தேனி, அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி, ரமேஷ் இருவரும் நேற்று(ஏப்.20) அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் குளித்துவிட்டு அமர்ந்துள்ளனர். அப்பொழுது அங்கு வந்த குன்னூரை சேர்ந்த ராஜபிரபு, அஜித் உள்ளிட்ட 6 பேர் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டு அவர்களை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தங்கப்பாண்டி, ரமேஷ் காயமடைந்தனர். க.விலக்கு போலீசார் 6 பேர் மீதும் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.