தொகரப்பள்ளி காப்பு காட்டில் விலங்குகளுக்கு தண்ணீர் வசதி செய்து தரப்படுமா?
தொகரப்பள்ளி காப்பு காட்டில் விலங்குகளுக்கு தண்ணீர் வசதி செய்து தரப்படுமா?;
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்துள்ள தொகரப்பள்ளி காப்புக்காடு உள்ளது இந்த காடு சுமார் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இங்கு மயில் புள்ளி மான்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வெயில் காலம் என்பதால் வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் தேடி வருகின்றன இதனால் வனவிலங்குகள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது வாகனங்கள் சிக்கி புள்ளி மான்கள் உள்ளிட்ட விலங்குகள் அடிப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகிறது இதனால் தாகம் தீர்க்க அதற்காக குடிநீர் தொட்டிகள் ஏற்கனவே அமைக்கப்பட்ட நிலையில் அங்கு குடிநீர் தொட்டிகளை சரி செய்து தண்ணீர் நிரப்பி வைத்தால் விலங்குகளுக்கு கடந்து வரும் நிலை இருக்காது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.