அரக்கோணத்தில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு
புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு;
அரக்கோணம் புதிய வட்டாட்சியராக வெங்கடேசன் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு ஆற்காடு திண்டிவனம் நகரி புதிய அகல ரயில் பாதை திட்டத்தில் வட்டாட்சியராக இருந்தார். பணியிடமாறுதலில் அரக்கோணம் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அரக்கோணம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த ஸ்ரீதேவி பனப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்கா திட்ட வட்டாட்சியராக மாறுதல் செய்யப்பட்டார்.